1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (17:34 IST)

நடிகர் கமல்ஹாசனை விமர்சித்த வானதி சீனிவாசன்

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
 
எனவே இன்று இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், கோவை மக்களின் வாழ்த்து மழையில் இன்று நான் வேட்பு மனுதாக்கல் செய்தேன் எனத் தெரிவித்தார்.
 
இதற்கு பாஜகவின் முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன், மே மாதம் 2 ஆம் தேதிக்குப் பின்னர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்கச் சென்றுவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிரான அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.