வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (11:57 IST)

வலிமை அப்டேட் வேணுமா? எனக்கு ஓட்டு போடுங்க! – ட்ரெண்டாகும் வானதி சீனிவாசன் ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தான் வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் கிடைக்கும் என தெரிவித்துள்ளது வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். வழக்கமாக அரசியல் பிரபலங்களை கண்டால் வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள் வானதி சீனிவாசனிடமும் அப்டேட் கேட்க அவர் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

வலிமை அப்டேர் கேட்ட நபருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள வானதி சீனிவாசன் “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி.” என்று பதிலளித்துள்ளார். இதை நெட்டிசன்கள் சிலர் “வலிமை அப்டேட் கிடைக்க வாக்களிக்க வேண்டிய வேட்பாளர்” என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். வானதி சீனிவாசனின் இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.