வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (13:03 IST)

பேரன் ஜூனியர் ராமச்சந்திரன் தேர்தலில் போட்டி??

அதிமுகவில் கடைசிவரை ஒரு தொண்டனாக இருப்பேன் என எம்ஜிஆர் பேரன் ஜூனியர் ராமச்சந்திரன் பேட்டி. 

 
சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
 
முன்னதாக அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் எம்.ஜி.ஆர்.ராமச்சந்திரன் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமானவை அளித்துள்ளேன். ஆலந்தூர், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் நான் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஒருக்காலும் தனித்து நிற்க மாட்டேன், அதிமுக தலைமை நிச்சயமாக எனக்கு வாய்ப்பு அளிக்கும். சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தனர். ஆனாலும் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன், கடைசி வரை அதிமுகவில் ஒரு தொண்டனாகவே நிலை நிற்பேன் என்றார்.