1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (21:38 IST)

ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு!

bakrid
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். 
 
வரும் ஜூலை 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி தெரிவித்துள்ளதை அடுத்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் நாள் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
பக்ரீத் பண்டிகை அன்று அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது 
 
ஆனால் தலைமை காஜி அவர்கள் ஜூலை 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என கூறியுள்ளதை அடுத்து அன்றைய தினம் அரசு விடுமுறை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.