திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (11:04 IST)

ஜூலையில் 15 நாட்கள் விடுமுறை!

ஜூலை மாதத்தில் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜூலை மாதம் துவங்க உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் வரும் விடுமுறை விவரம் பின்வருமாறு... 
 
ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை - புவனேஷ்வர்
ஜூலை 7: கர்ச்சி பூஜை - அகர்தலா
ஜூலை 9: இத்-உல்-அதா (பக்ரித்) - கொச்சி, திருவனந்தபுரம்; இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளும் மூடப்படும்
ஜூலை 11: ஈத்-உல்-அஷா - ஸ்ரீநகர், ஜம்மு
ஜூலை 13: பானு ஜெயந்தி - கேங்டாக்
ஜூலை 14: Beh Dienkhlam - ஷில்லாங்
ஜூலை 16: ஹரேலா - டேராடூன்
ஜூலை 26: கேர் பூஜை - அகர்தலா
இதைத் தவிர வார விடுமுறைகளாக 7 நாட்கள் உள்ளன.