திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (14:03 IST)

உக்ரைனில் இருந்து இந்தியர்களை தரை மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு

உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் சிக்கித் தவிக்கும் இந்தியரை தரை மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

 
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். இன்று இரண்டாவது நாளாக போர் நடந்து வருகிறது. 
 
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். இதனிடையே உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்தியர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன. தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் சிக்கித் தவிக்கும் இந்தியரை தரை மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியாவுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி உள்ளார்.