1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Judge give bail in farmer attack case

விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமின்.. நீதிபதி சொன்ன காரணம்..!

நீதிபதி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அக்டோபர் 2ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்  விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
 
ஆனால் தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி..39 பேர் படுகாயம்