திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:49 IST)

ஜோதிமணி உள்பட 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து!

Jothimani
பாராளுமன்றத்தில் அமளி செய்ததால் மொத்தம் இருபத்தி மூன்று எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஜோதிமணி உள்பட 4 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்து வருவதால் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவர்களில் திமுக எம்பிக்கள் மற்றும் ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலைஇல் ஜோதி மணி மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த நான்கு எம்பிக்களும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.