திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2025 (07:01 IST)

திருப்பதியில் லட்டு விவகாரம்.. அதிரடியாக 4 பேரை கைது செய்த சிபிஐ..!

Tirupathi Laddu
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெயில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு தீவிரமாக விசாரணை செய்து வந்தது.

இந்த நிலையில், திருப்பதியில் லட்டு கலப்படம் தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், , அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகர் ஆகிய நான்கு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva