1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (21:32 IST)

ஜீன்ஸ் டீசர்ட்டில் கலக்கும் ஜோதிமணி எம்பி: வைரலாகும் புகைப்படம்

தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே மிகவும் எளிமையான எம்பி என்ற பெயரைப் பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி. இவர் எளிமையான உடையுடனும் ஆடம்பரமின்றி தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமின்றி தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆன பிறகும் வலம் வந்தார். இதனால் அவர் பொது மக்களில் ஒருவராகவே கருதப்பட்டார் 
 
டெல்லியில் ஜோதிமணி எம்பி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போதிலும் எளிமையான காட்டன் சேலைகளை உடுத்திய அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜோதிமணி எம்பி அவர்கள் சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றார்
 
25 நாடுகளில் இருந்து 25 பெண்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் ஜோதிமணி அவர்கள் வெற்றிகரமாக கலந்து கொண்டு திரும்பி வர வேண்டும் என்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி அவர்கள் வாழ்த்தி வழியனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஜோதிமணி அவர்களை சேலையில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அமெரிக்கப் பயணத்தின்போது ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து கலக்கினார். நவநாகரீக உடைகள் அணிந்து ஜோதிமணி எம்பியை இதுவரை பார்த்திராத நெட்டிசன்கள் அவரது ஜீன்ஸ் டி-ஷர்ட் உடையுடன் கூடிய புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்