செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (17:30 IST)

பிரபல சினிமா விமர்சகரை ஜோதிமணி திட்டியது உண்மையா??

திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கஸ்வாமியை கரூர் எம்.பி.ஜோதிமணி திட்டியது உண்மையா என்று பார்க்கலாம்.

பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கஸ்வாமி, இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாக ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். அந்த கருத்துக்கு கரூர் எம்.பி.ஜோதிமணி “போடா முட்டாள்” என பதிலளித்ததாக ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் அந்த டிவிட்டர் அக்கவுண்ட் தன்னுடைய அக்கவுண்டே அல்ல என்று கரூர் எம்.பி.ஜோதிமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விளக்கம் தெரிவித்த ஜோதிமணி,
”சங்கப்பரிவாரங்களின் பெய்டு ட்ரோல்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது Id க்களை போர்ஜரி செய்யும் பணியைத் துவங்கியிருக்கிறார்கள். பிஜேபியிடம் நிறைய பணம் இருக்கலாம் அதற்காக தமிழ் ஒழுங்காக எழுதக்கூடத் தெரியாதவர்களை பணிக்கு அமர்த்தவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்!”
 

என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அக்கவுண்ட் கரூர் எம்.பி.ஜோதிமணியின் அதிகாரபூர்வமான டிவிட்டர் அக்கவுண்ட் தான் என இணையவாசிகள் பின்னோட்டம் இட்டு வருகின்றனர். திரை விமர்சகர் பிரசாந்தை, ஜோதிமணி திட்டியதாக பரப்பப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் “போடா முட்டாள்” என்பதற்கு பதிலாக ”போடா மூட்டாள்” என்று எழுத்துப்பிழையாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.