திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (20:45 IST)

பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிதம்பரம் : பரபரப்பு தகவல்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ’ ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது  மிகவும் மோசமானது. அதைவிட அவர்  ஒரு கோழை’ என்று ஆடிட்டர் மற்றும் துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில்  சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முனைப்பாக உள்ளது. அதேசமயம் சிதம்பரம் தரபில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து தற்போது ப.சிதம்பரம் எங்கே என தெரியாத நிலையில், பல அரசியல் தலைவர்கள் இது குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சிதம்பரம் கூறியுள்ளதாவது ;

தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக வெளியான தகவலை கடுமையாக மறுக்கிறேன். உயர்நீதிமன்ற நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் எனது தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.   7 மாதங்களுக்கு பின்னர் எனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது  டெல்லி உயர் நீதிமன்றம் என்று அவர் தெரிவித்தார்.