செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:17 IST)

பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியன் கட்சி.. எத்தனை தொகுதிகள்?

john pandian
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் கட்சி மற்றும் ஏசி சண்முகம் கட்சி ஆகியவை இணைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சியாக ஜான்பாண்டியன் கட்சி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தமிழகத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் கூட்டத்தில் ஜான் பாண்டியன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்தது. இதனையடுத்து பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்  பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக மற்றும் பாமக இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

Edited by Siva