வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (10:22 IST)

2 தொகுதிகள் வேண்டும்.. அடம் பிடிக்கும் கமல்.. ஒப்புக்கொள்ள மறுக்கும் திமுக.. பரபரப்பு தகவல்..!

Makkal Needhi Maiam
திமுக கூட்டணிகள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையும் என்று செய்திகள் வெளி வந்தாலும் இதுவரை ஒரு சுற்று கூட அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இரு கட்சிகளிடையே நடைபெறவில்லை.

ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்ததாகவும் ஆனால் கமல்ஹாசன் இரண்டு தொகுதிகள் வேண்டும், அதுவும் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் இதனால் முதல் கட்ட பேச்சு வார்த்தை கூட இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் 7 முதல் 9% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் எனவே இரண்டு தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் ஏற்கனவே கூட்டணி கட்சிகள் அதிகமாக இருப்பதால் புதிய கட்சியாக கமல் கட்சி சேர்ந்து உள்ளதால் அந்த கூட்டணிக்கு அதிகபட்சம் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக கூறிய வருவதால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 

Edited by Mahendran