1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. American Student Visa: Social Media Details Now Mandatory!

பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு இருந்தால் தான் விசா: அமெரிக்கா புதிய நிபந்தனை..!

அமெரிக்கா
அமெரிக்காவுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு, இப்போது புதிய நிபந்தனை ஒன்று சேர்ந்துள்ளது. ஆம், மாணவர் விசா வழங்கும் நடைமுறைகளை மீண்டும் தொடங்கியுள்ள அமெரிக்கா, இனி விசா விண்ணப்பத்திலேயே உங்கள் சமூக வலைதள கணக்கு விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
 
கடந்த மாதம் மாணவர் விசா நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளன. இதன்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் ஃபேஸ்புக், , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை தெளிவாக தர வேண்டும்.
 
அமெரிக்க அதிகாரிகள், இந்த சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்வார்கள்,  அமெரிக்க அரசுக்கோ, மக்களுக்கோ எதிராக ஏதேனும் பதிவுகள், கருத்துகள் பகிரப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். அதன்பின்னர் தான் விசா வழங்கும் நடைமுறை ஆரம்பமாகும்.
 
இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில்,  இந்த புதிய விதிமுறைகள் அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் நாம் சாதாரணமாய் பகிரும் ஒரு பதிவு கூட விசா பெறுவதில் தடையாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அபாயகரமான செஜ்ஜில் ஏவுகணை தயார் நிலையில்? - இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!