1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (16:56 IST)

ஜெயக்குமாரின் மகள்-மருமகன் முன் ஜாமின் மனுதாக்கல்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பதும் மூன்று வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மூன்று வழக்குகளில் ஒன்றான நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மட்டுமின்றி அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்  மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.