செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (19:25 IST)

அதிமுக அரசு பேனல் வைத்தா கீழே விழாதா ? கார்த்திக் சிதம்பரம் கேள்வி

சில நாட்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணை அருகே, சாலை நடுவில் வைத்திருந்த பேனர், இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்ததால் அவர்  கீழே விழுந்தார். ஒரு டேங்கர் லாரி அவர் மீது ஏறியது. இதில், சுபஸ்ரீ பரிதாபமாக பலியானார்.
அதன்பிறகு நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது. அதன்படி அதிமுக, திமுக  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தப் பேனரை வைக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், சீன  அதிபருடன் பாரத பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான  இடமாக தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்து அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, வழி நெடுகிலும் பேனர் வைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாவது : மத்திய அரசு அல்லது மாநில அரசு பேனர்கள் வைத்தால் அதற்க்கான விதிமுறைகளை கைக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமை என்று கூறியுள்ளது.
 
இந்நிலையில் சிதம்பரம் எம்பி. கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உயர் நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி அளித்துள்ளது விசித்திரமாக உள்ளது. அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா ? என கேள்வி எழுப்பினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது என அரசியல் கட்சிகள் செயல்படுகிறது. பாஜகவை எதிர்ப்பவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதமாகிவிடுவார்கள் என நினைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.