திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (17:45 IST)

என்னடா இது குட்டிம்மாக்கு (தீபா) வந்த சோதனை... மிஸ் பண்ணாம வீடியோ பாருங்க!!

முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடபோவதாக அறிவித்தார். 
 
முன்னர் அதிமுகவுடன் இணைய விருப்பம் தெரிவித்தார். இதற்கு ஏற்றார் போல் ஓ.பன்னீர் செல்வமும் தீபா அதிமுகவில் வந்து இணைய அழைப்புவிடுத்தார். ஆனால், என்ன காரணங்களாளோ தெரியவில்லை, தீபா அதிமுகவில் இணையவில்லை. 
 
பல முறை தீபா பேட்டிகளின் போது அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், இதே போல் கூறியதற்கு, பேட்டி எடுத்த அந்த நபர் அதிமுகவின் தொண்டர்கள் உங்கள் பக்கம் இருந்தால் அதிமுக தலைவர்கல் உங்களை எப்படி விடுவார் பட்டு கம்பளம் விரித்து அதிமுகவிற்கு உங்கலை அழைத்து சென்றிருபார்களே என கேட்டார். 
 
இதற்கு தீபா நான் அதிமுகவின் இணைந்தால் அக்கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என சிலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாது என பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த ஜெயலலிதாவின் போட்டோ கீழே விழுந்து உடைந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவை கண்ட பலரும் காமெடியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 
 

நன்றி: SUN NEWS