1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalithaa fingerprint issue: Radhakrishan opposed doctor balaji statement

ஜெ. கைரேகை சர்ச்சை: கோர்த்துவிட்ட டாக்டர் பாலாஜி; மறுத்த சுகாதாரத்துறை செயலாளர்

ஜெயலலிதா
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட விவகாரம் அப்போது முதல் தற்போது வரை சர்ச்சையாக உள்ளது.

 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது அப்போதே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 
 
திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனின் கோரிக்கைபடி டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக இன்று டார்கர் பாலாஜி மூன்றாவது முறையாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகினார். இதற்கு முன்பு இரண்டு முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் அவர் சுயநினைவோடுதான் பெறப்பட்டது. கையெழுத்திட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்று கூறியிருந்தார்.
 
விசாரணையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற யாரும் எழுத்துப்பூர்வ ஆவணம் கொடுக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் டாக்டர் பாலாஜியின் விளக்கத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாலாஜி கூறியதை முழுவதுமாக கேட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்