1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (11:13 IST)

சேலத்தில் எம்ஜிஆர், ஜெ.வின் மணிமண்டம் அடிக்கல் நாட்டும் விழா - முதல்வர் பங்கேற்பு

சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 
சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.  2100 சதுரடியில் ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
 
விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அவருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.