1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (13:45 IST)

ஓ.பி.எஸ் தவறு செய்யவில்லை ; சசிகலா தவறாக வழிநடத்தப்பட்டார் - திவாகரன் ஓப்பன் டாக்

ஓ.பி.எஸ்-ஐ இழிவாக அசிங்கப்படுத்தியதால்தான் அவர் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக திரும்பினார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே, தினகரனுக்கு எதிராக பல கருத்துகளை திவாகரன் வெளிப்படையாக பேசி வருகிறார்.
 
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது. 
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் அவர் தினகரன் பற்றி பல  கருத்துகளை  வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

 
சசிகலாவை தினகரன் தவறாக வழி நடத்தினார். அது தெரியாமல் அவரை ஆதரித்தேன். பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் தனி அணியாக செயல்படுவேன். அவர் சாகடித்த அம்மா அணிக்கு உயிர் ஊட்டுவேன். இது காலத்தின் கட்டாயம் என திவாகரன் தெரிவித்தார்.
 
மேலும், முதல்வராக இருந்த போது ஓ.பி.எஸ் அவரின் வேலையை ஒழுங்காக செய்து வந்தார். ஆனால், போயஸ்கார்டனில் ஜெ.வை சந்திப்பதற்காக நெடுநேரம் காத்திருப்பார். ஆனால், அவரை சந்திக்க விடவே மாட்டார்கள். சுதந்திர தின விழாவில் அவர் மனைவியுடன் கலந்து கொண்டது தினகரனுக்கு பிடிக்கவில்லை. எனவேதான், அவரைப் பற்றி தவறாக சசிகலாவிடம் கூறி தினகரன் பல வேலைகள் செய்தார். இறுதியில், ஓ.பி.எஸ்-ஐ அசிங்கப்படுத்தி ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கினர். எனவே, அவர் சசிகலாவிற்கு எதிராக திரும்பினார். தினகரனால் சசிகலா தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதுதான் உண்மை. இதுபுரியாமல் சசிகலா ஜெ.வின் சமாதியில் அடித்து சத்தியம் எல்லாம் செய்தார். இது அனைத்தும் தினகரன் செய்த திட்டமிட்ட சதி” என திவாகரன் கூறினார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் சசிகலாவிற்கு எதிராக திரும்பி அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும், தினகரனுக்கும் எதிராகவும் சசிகலாவின் சகோதரார் திவாகரன் திரும்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது.