புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (06:07 IST)

ராஜஸ்தானில் காலில் போட்டு மிதிக்கப்படும் ஜெயலலிதா: அதிர்ச்சி தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் பெரும்பாலான தமிழக மக்களின் மனங்களில் குடிகொண்டவர். அவருடைய படத்தை இன்னும் பூஜையறையில் வைத்து வழிபட்டு வரும் மக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




 

தமிழகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முகப்பில் ஜெயலலிதா முகம் பதித்த டைல்ஸ்களை ஒட்டுவது வழக்கம். அதற்காக தயாரிக்கப்பட்ட டைல்ஸ்கள் முறைகேடாக ராஜஸ்தானுக்கு விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ராஜஸ்தான் ஓட்டல் ஒன்றின் சமையலறையில் ஜெயலிதா படம் போட்ட டைல்ஸ் தரையில் ஒட்டப்பட்டு கால்களால் மிதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஓட்டலின் உரிமையாளரிடம் கேட்டபோது டைல்ஸில் உள்ளவர் யாரென்றே எங்களுக்கு தெரியாது, விலை மலிவாக கிடைத்தது வாங்கி பயன்படுத்தினோம்' என்று கூறினாராம்