வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (05:39 IST)

இந்து பிரதமர், இந்து உபி முதல்வர்: அதேபோல் இந்து குடியரசு தலைவர். சிவசேனா

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடைய உள்ளதால் அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பாஜக மும்முரமாக உள்ளது.



 


அந்த வகையில் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் பரிசீலனையில் இருக்கும்போது  சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மோகன்  சஞ்சய் ராவத் பேட்டி ஒன்றில் கூறுகையில், ' இந்து தேசம் என்ற கனவானது நிறைவேற வேண்டும் என்றால் மோகன் பகவத் இந்தியாவின் ஜனாதிபதியாக வேண்டும். இந்துத்துவா தலைவர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். மற்றொரு இந்துத்துவா தலைவர் யோகி ஆதித்யாநாத் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக உள்ளார். எனவே, இந்து தேசம் என்ற நம்முடைய கனவானது நிறைவேற வேண்டும் என்றால் மோகன் பகவத் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உபியில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால் பாஜக தேர்வு செய்யும் ஒருவரே அடுத்த குடியரசு தலைவர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்களுடன் அவ்வப்போது மோதி வரும் சிவசேனா கட்சியினரை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயங்கி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.