1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (17:48 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் காலியான அவருடைய தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.



 
 
அதுமட்டுமின்றி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.
 
மேலும் குஜராத் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து வரும் திங்கள் அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இருப்பினும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதிக்குள் எண்ணப்படும்' என்று ஜோதி கூறினார்.