1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:30 IST)

இப்போது என்ன சொல்கிறீர்கள்? - பாண்டேவை மடக்கிய தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் நேற்று தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அவரை பேட்டி எடுத்தார்.


 

 
தொடக்கும் முதல், தனது அத்தை ஜெயலலிதா மிகவும் நல்லவர். அவர் எங்களுடன் பாசமாக பழகி வந்தார். நானும் எனது தந்தையும் அடிக்கடி போயஸ் கார்டன் சென்று அவரை சந்தித்து விட்டு பேசி விட்டு வருவோம். எங்கள் குடும்பத்தை அவர்தான் பார்த்துக் கொண்டார். 
 
அது சசிகலாவிற்கு பிடிக்கவில்லை. எனவே என்னை பற்றி தவறாக அவரிடம் கூறி அவரின் மனதை மாற்றி, அவர் என்னை சந்திப்பதையே தடுத்துவிட்டார் என தீபா கூறி வந்தார்.
 
ஆனால், அதை ஏற்க மறுத்த பாண்டே, ஜெயலலிதா என்ன சின்ன குழந்தையா?.. சசிகலா என்ன சொன்னாலும் அவர்  கேட்பாரா?.. அவர் உங்களை சந்திக்க வேண்டும் என உறுதியாக இருந்திருந்தால் அதை யார் தடுக்க முடியும்? என்கிற ரீதியில் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருந்தார். 
 
தீபா எவ்வளவு கூறியும் பாண்டே ஏற்கவேயில்லை. ஒரு  கட்டத்தில் பேசிய தீபா, சரி என் அத்தை என்னை பார்க்க விரும்பவில்லை என வைத்துக் கொள்வோம். அவர் மரணமடைந்த தகவல் கேட்டு நான் போயஸ் கார்டன் சென்றேன். அப்போது அவர் உயிரோடு இல்லை. அப்போதும் என்னை போயஸ் கார்டனுக்குள் விட வில்லை. 
 
கடைசியாக என் அத்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு செல்கிறேன் என கெஞ்சினேன். அப்போது எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது என்னை தடுத்தது யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாண்டே முழித்தார். 
 
அதன்பின், அதை விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு தாவினார் பாண்டே “கடைசியாக ஜெ. புதைக்கப்படுவதற்கு முன், உங்கள் சகோதரர் தீபக், இறுதி சடங்கு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் உங்களை ஏன் அனுமதிக்கவில்லை” என கேட்டார். அதற்கு பதில் அளித்த தீபா, “ இப்போது உங்களுக்கு புரிகிறதா?... என்னை மட்டும் அவர்கள் பாரபட்சமாக நடத்தினார்கள் என்று” என பாண்டேவை மடக்கினார்.