செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:06 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய அதிகாரி மறைவு

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.பி.  நல்லம்ம நாயுடு இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83 ஆகும்.

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பணியாற்றினார். இதில், சுமார் 2341 சான்று ஆவணங்களையும், 1606  சான்றுப் பொருட்களையும் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில்  பெங்களூர் சிறையில் ஜெயலலித அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.