செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (08:42 IST)

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை - ஜெயகுமார் பேட்டி!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜூவ் காந்தி அரசு மர்த்துவமனையில் சுனிதா என்பவர் கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 23-ம் தேதி முதல் காணாமல் போனதாகவும்,  இவர் 8-ம் தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இதில் ஒரு பெண் மட்டும் குற்றவாளி என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் மின் தட்டுபாடு நிலவிவருவதாகவும், கட்டுமான பொருட்களின் விலை உயர்ஙால் பல கட்டுமானங்கள் முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
நிலுவையில் உள்ள 4 ஆயிரம் கோடி வாட் வரி இழப்பிட்டை பெற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக கூறிய நிலையில் அதற்கு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாகுறை இருப்பதை காண முடிவதாகவும், தடுப்பூசி இல்லை என கூறவது அரசா என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் தெரிவித்தார்.