திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 மே 2021 (09:26 IST)

கொரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு இலவச உணவு… திருப்பத்தூரி தொண்டு நிறுவனம் உதவிக்கரம்!

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு காலை மற்றும் மதியம் இலவசமாக உணவு வழங்கியுள்ளது ஒரு தொண்டு நிறுவனம்.

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளோடு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பசுமை தாய் நாடு அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் காலை மற்றும் மதியத்தில் உணவு வழங்கி வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு அரசாங்கமே உணவு வழங்கிவிடும் நிலையில் உறவினர்களுக்கு சாப்பாடு வெளியே சென்று வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அவர்கள் வெளியே செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த அமைப்பை உருவாக்கி சுமார் 350 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.