திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (20:07 IST)

பத்திரிகையாளர்களை அதிமுக அரசு காக்கும்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள் குறித்தும் ஊடகத்தின் பாதுகாப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்திய ஊடக சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தந்தாலும், மாநில அரசு பத்திரிக்கையாளர் பக்கமே நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பத்திரிகையாளரின் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகை துறையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்றும் கூறினார் மேலும் பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தந்தாலும் பத்திரிகையாளர் பக்கமே தமிழக அரசு துணை நிற்கும் என்றும் கூறினார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் உலகிற்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு தன்னலமற்ற வகையில் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்