புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (12:38 IST)

யாரும் அசைக்க முடியாது... அசால்ட்டு பண்ணும் ஜெயகுமார் !

அதிமுக ஒரு எக்கு கோட்டை, யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என ஜெயகுமார் கூறியுள்ளார். 

 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற அமமுக பிரமுகர் சசிகலா தனது தண்டனை காலம் முடிந்து வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 27ம் தேதி விடுதலை உறுதி என்றும் ஆனால் அதற்கு முன்னதாகவே விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
விடுதலையானதும் சசிக்கலா நேரடியாக மன்னார்குடி செல்வதாகவும் அங்கு சில காலம் ஓய்வெடுத்த பிறகு அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததால் அதிமுக நான்காக உடையும் என சிலர் கூறி வருகின்றனர். அதிமுக உடைவே உடையாது. அது ஒரு எக்கு கோட்டை. யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.