1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (16:23 IST)

கமல் கதி தான் ரஜினிக்கும்.. ஜெயகுமார் வார்னிங்!

கமல் கட்சி தொடங்கி அவருடைய சக்தி என்ன என்பதை தெரிந்து கொண்டார். அதே நிலைதான் ரஜினிக்கும் ஜெயகுமார் பேட்டி. 
 
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடிபெற்றது. இந்த விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி, அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என பயந்தேன். ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மாற்றம் வரும் என என்று பேசினார். 
 
ரஜினியின் அரசியல் வரவு தமிழகத்தில் மாற்றத்தை உண்டாக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் திரைப் படத்தில் பெரிய நட்சத்திரங்களாகவும், அரசியல் வானில் மிகவும் பெரிய நட்சத்திரங்களாகவும் ஜொலித்தார்கள்.
 
மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் சக்தியாக இருவரும் இருந்தார்கள். ஆனால் இன்று ரஜினியும், கமலும் திரையில் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் வானில் இவர்கள் ஜொலிக்காத நட்சத்திரங்கள்.
 
கமல் கட்சி தொடங்கி அவருடைய சக்தி என்ன என்பதை தெரிந்து கொண்டார். அதே நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.