புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (10:16 IST)

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?? ஜெயக்குமார் பதில்

2021-ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து அதிமுகவின் அலை தமிழகத்தில் ஓய்ந்துப்போய்விட்டது என பலரும் கூறிவந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலை தமிழகத்தில் ஒரு திருப்புமுனை மிக்க தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் 2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று நிரூபர்கள் பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் “2021 தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும்” என பதிலளித்துள்ளார். மேலும் ”இது கட்சிக்குள் நடக்கும் விஷயம், வீணாக குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” எனவும் பதிலளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானது குறித்து பலரும் விமர்சனங்கள் வைத்து வந்த நிலையில், அடுத்து வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தான கேள்வி மக்களிடமும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.