திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (14:10 IST)

சசிக்கலாவுக்கு ஆதரவா பேசினா பதவி நீக்கம்தான்! – ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை?

சசிக்கலா தன்னை அதிமுக பொதுசெயலாளர் என கூறிக்கொள்ளும் விவகாரம் குறித்து பேசியுள்ள ஜெயக்குமார், சசிக்கலாவுக்கு அதிமுகவில் எப்போதும் இடமில்லை என பேசியுள்ளார்.

சமீபத்தில் சசிக்கலா தன்னை அதிமுக பொதுசெயலாளர் என கூறி கல்வெட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுகவில் சசிக்கலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமியும், சசிக்கலாவை இணைப்பது குறித்து அதிமுக உறுப்பினர் குழு முடிவு செய்யும் என ஓ.பன்னீர்செல்வமும் பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவுக்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடமில்லை. சசிக்கலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதே அதிமுகவின் நிலைபாடு” என்று தெரிவித்துள்ளார்.