1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (13:46 IST)

கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம்: ஜெயகுமார் பகீர்!!

கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம் என அமைச்சர் ஜெயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 
 
அமைச்சர் ஜெயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மார்ச் 16 முதலே சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 
மேலும், வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் மார்ச் 16 அன்று திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். எனவே, கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அரசின் நடவடிக்கையில் குறை காண முடியாது. 
 
அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை, அரசை விமர்சிப்பதன் மூலம், தன்னலம் இன்றி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கொச்சை படுத்துவதாக தான் ஸ்டாலின் விமர்சனத்தை எடுத்துக் கொள்ள முடியும் என விமர்சித்தார்.