விவசாய பொருட்களை விற்க உதவி மையங்கள்: முழு பட்டியல் இதோ!
ஊரடங்கால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் உதவி மையங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவாசாயிகள் பலர் விவசாய பொருட்களை விளைவிப்பது மற்றும் விற்பனை செய்வதில் பெரும் தேக்கநிலை கண்டுள்ளதாக தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் “இந்த சோதனையான காலத்தில் விளைபொருட்களை விற்க விவசாயிகள் அடையும் சிரமங்களை புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயிகளின் இன்னல்களை நீக்க அரசு என்றும் விவசாயிகளின் உற்ற தோழனாக துணை நின்று உதவி செய்யும். விவசாய பெருமக்கள் விளைபொருட்களை விற்க கீழ்க்கண்ட உதவி மைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.” என மாவட்ட வாரியான உதவி மைய எண்களை பகிர்ந்துள்ளார்.