அமித்ஷா வருகைக்கும் அதிமுகவும் என்ன இருக்கு? ஜெயகுமார் பேட்டி!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 17 நவம்பர் 2020 (15:56 IST)
அமித்ஷாவின் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. 
 
பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் சரி, மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சரி பாஜகவின் வெற்றிக்கு அமித்ஷாவின் அரசியல் தந்திரம் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜக அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளது. 
 
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜக தமிழக தலைவர்களுடன் தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை செய்வார் என தெரிகிறது. 
 
இந்நிலையில், அமித்ஷாவின் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும், தேதல் வருவதால் பாஜகவை பலப்படுத்தவே அக்கட்சி தலைவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :