1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (14:43 IST)

எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையாக சமாளிப்போம்: அமைச்சர் ஜெயகுமார்

ரஜினி, கமல், திமுக என எத்தனை பேர் தனித்தனியாக வந்தாலும், கூட்டணியாக வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் ஒத்தையாக அனைவரையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
 
உலக மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்த அவ்வையார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவதுள்
 
நடிகர் ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைந்தார் என்பது தனக்கு தெரியாது என்றும் ரஜினி-கமல் திமுக என எத்தனை காட்சிகள் கூட்டணியாக வந்தாலும் தனித்தனியாக வந்தாலும்  ஒத்தையா அதனை அதிமுக எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்
 
ரஜினி கமல்
ரஜினி மற்றும் கமல் உள்பட யாரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் மக்கள்தான் அங்கீகாரம் தரவேண்டும் அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவருடைய கொள்கைகள் என்ன, கோட்பாடுகள் என்பதை எல்லாம் பார்த்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் 
 
எங்களைப் பொருத்தவரை எத்தனை பேர் வந்தாலும் சரி ஒத்தையா நின்னு நாங்கள் சமாளிப்போம் நீச்சல் தெரிந்தவர்களுக்கு ஆழத்தை பற்றிய கவலை இல்லை. எவ்வளவு ஆழமான கடல் ஆக இருந்தாலும் அதிமுகவினர்களுக்கு அனைத்து வகை நீச்சல்களும் தெரியும் என்பதால் கடலில் தூக்கி போட்டாலும் நாங்கள் நீந்தி வந்துவிடுவோம், ஆனால் மற்றவர்களுக்கு நீச்சல் தெரியுமா? கரை சேருவார்களா? என்பது எனக்கு தெரியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்