டிஸ்கவரி சேனல் வெளியிட்ட ரஜினியின் குத்து பாடல்!

discovery
டிஸ்கவரி சேனல் வெளியிட்ட ரஜினியின் குத்து பாடல்
Last Modified வெள்ளி, 6 மார்ச் 2020 (22:29 IST)
டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த ஆவணப்படம் வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒரு அதிரடி குத்துப்பாடலை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அட்டகாசமாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளது.

ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆட்டம் போட வைக்கும் பாடல் வரிகளும் அதற்கேற்ப ஆடும் நடனங்களும் அனைவரையும் குறிப்பாக ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. ‘தலைவர் ஆன் டிஸ்கவரி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலை இதோ நீங்களும் பார்த்து ரசியுங்கள்


இதில் மேலும் படிக்கவும் :