புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (12:51 IST)

ரஜினிக்கு அரசியல் ஆதரவு: இப்போதே வாக்கு கொடுத்த சுவாமி!!

ரஜினிக்கு அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

 
விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.   
 
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாகவும் கூறினார். 
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிஏஏ-வால் எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையும் பறிக்க போவதில்லை. இந்துக்கள் ஒற்றுமையை கெடுத்து, அதன் மூலம் நாட்டின் பெயரை கெடுப்பதற்காகவே சிலர் சதி செய்து வருகின்றனர்.
 
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் எப்படி இந்து மதத்திற்காக குரல் கொடுத்தாரோ, அதேபோன்று எதிர்காலத்திலும் அவர் தொடர்ந்து பேசினால், அரசியலில் அவருக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.