1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (11:20 IST)

விக்கிரவாண்டியில் 82.48% வாக்குப்பதிவு.. அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது தேர்தலையா? எடப்பாடி பழனிசாமியையா?

kc palanisamy
அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? அல்லது எடப்பாடி பழனிசாமியையா? என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர்   வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் இந்துத் தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தத் தொகுதியில் நோட்டா 2.18 லட்சம் வாக்குகள் பெற்றது. இதுதான் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது.
 
இதேபோல  தான் அதிமுக, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.   தேர்தல் புறக்கணிப்பு என்றால் அதிமுகவினர் யாரும் வாக்குச்சாவடி பக்கமே செல்லக்கூடாது. வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய வேண்டும், அது தான் தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தமாகும். 
 
ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 82.48%. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை  என்பது தெரிகிறது என கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran