வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (20:00 IST)

கூட்டணிய நான் பாத்துக்குறேன்.. நீங்க முதல்ல இதை செய்யுங்க! - நிர்வாகிகளுக்கு எடப்பாடியார் அறிவுரை!

இன்று தொடங்கி நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் மாநில கட்சியாக உள்ள அதிமுக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு உள் சிக்கல்களால் தவித்து வருகிறது. முன்னதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் ஏற்பட்ட நிலையில் அதை சரிசெய்து மீண்டு வரும்போது பாஜகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. அனைத்து தேர்தல், இடைத்தேர்தலிலும் போட்டியிடும் அதிமுக முதன்முறையாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.

அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக அலுவலகத்தில் தொடங்கி நடைபெறுகிறது.

இதில் இன்று அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி “கூட்டணி அமைப்பது குறித்த முடிவுகளை தலைமை பார்த்துக் கொள்ளும். நீங்கள் தேர்தல் வெற்றிக்காக பணியாற்றுங்கள். அதிமுக அமைப்பில் எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அதையெல்லாம் கண்டறிந்து சரி செய்யுங்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக பணியாற்றுங்கள்” என அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

Edit by Prasanth.K