1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (14:55 IST)

ஆளுனரே சொல்லிவிட்டார், திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுனரே சொல்லிவிட்டார் என்றும் அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நேற்று ஆங்கில உலகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியுள்ளார். எனவே 356ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran