1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (15:46 IST)

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை: ஆலோசிக்கப்படும் என ஜெயக்குமார் தகவல்

Jayakumar
இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் உள்ளது
 
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் கூறி வருவதாகவும் அடுத்து வர இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதம் செய்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார் 
 
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை என்றால் அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இருவரும் இன்றி சசிகலாவா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன