செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (10:56 IST)

ஓகி புயல் ; 25 பேர் மரணம் ; 194 பேரை காணவில்லை - ஜெயக்குமார் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி ஒகி புயலால் 25 பேர் மரணமடைந்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
குமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்தது. மீனவ மக்கள் பலர் தங்களின்  வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள். 
 
ஓகி புயலிற்கு முன் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், ஓகி புயலில் சிக்கி பலர் மாயமானார்கள். மத்திய மாநில அரசுகள், நடவடிக்கை எடுத்து காணாமல் போன மீனவர்கள் பலரை மீட்டனர். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்நிலையில் அரசு நடத்திய கணக்கெடுப்பில் 104 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 433 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலில் செய்திகள் வெளியானது.  
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ ஓகி புயலில் 194 மீனவர்களை காணவில்லை. 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால்  அவர்கள் உயிரிழந்ததாக கருதப்படுவார்கள். இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கைகள் தொடர்பான அறிவிப்பு அரசு இதழில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.