செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:02 IST)

அவர் மீது முதல்வருக்கு என்ன தனிப்பட்ட கோவமோ? ஜெயகுமார் மனைவி பேட்டி!

என் கணவர் மீது முதல்வருக்கு என்ன தனிப்பட்ட கோவம் என்று தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனைவி பேட்டி. 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு தேர்தல் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடி அருகே திமுக தொண்டருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
 
இதனால் திமுக தொண்டரை தாக்கிய ஜெயக்குமார் அவரை சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் கைதுக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் பிரபல பத்திரிக்கைக்கு ஜெயகுமாரின் மனைவி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், வீட்டின் உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்த போது போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் கைது செய்ய வந்தனர். லுங்கி அணிந்திருந்ததால் உடை மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறியும் கேட்காமல் அப்படியே இழுத்து சென்றனர். என் கணவர் மீது முதல்வருக்கு என்ன தனிப்பட்ட கோவம் என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.