1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (19:24 IST)

தண்ணி காட்டும் நித்தியானந்தா... பிடிக்க முடியாம் திணறும் வெளியுறவுத்துறை!

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார். 
 
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.  
 
இதற்கென்று தனி வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தீவை தனி நாடு போல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் நித்யானந்தா. அதாவது தனி சின்னம் பதித்த தனி கொடி, தனி பாஸ்போர்ட், தென் அமெரிக்க நாட்டின் சட்ட உதவியுடன் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈடுவடார் அரசு. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்து தொடர்பாளர் ரவீஷ் குமார், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. 
 
நித்தியானந்தா பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர் என்பதால் பாஸ்போர்ட் மூடக்கம் செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்த எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.