செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (14:45 IST)

தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் ! மாநகராட்சி அதிரடி

சொத்து வரி கட்டாத தனியார் மெட்குலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டிஸ் அனுப்பி  மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தற்போது வரை சொத்து வரிகளை   நிலுவை வைத்துள்ளன.

இந்நிலையில் சொத்து வரி கட்டாத  நிலையில் தமிழகம் முழுவதிலும் உள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளா சுமார் 200க்கும் அதிகமான மெட்குரிலேசன் பள்ளிகள் சம்பம்தப்பட்ட உள்ளாட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 6  லட்சம் முதல் 10 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகள் வரிகள் செலுத்தத் தவறினால் பள்ளியில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரித்துள்ளனர்.