தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்: அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அவகாசம்!
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கட்டுவது குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதன்படி கொரோனா காலத்தில் பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர்களிடமிருந்து 75 சதவீதம் அளவு கட்டணத்தையும் கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்காத பெற்றோர்களிடமிருந்து 85 சதவிகித கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் 75 சதவீத கட்டணத்தை ஆறு தவணைகளாக பெற்றவர்களில் இருந்து பெற வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி வரை இந்த பெற்றோர்கள் கல்விக் கட்டணத்தை கட்டிக்கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கல்வி கட்டணம் உள்ளிட்ட காரணத்தை கூறி மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது என்றும் ஆன்-லைன் வழிக் கல்வியையும் புறக்கணிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் நான்கு வாரத்திற்குள் தங்கள் பள்ளிகளின் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்