செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (13:37 IST)

மக்கள் ஊரடங்கு - வெறிச்சோடிய நெல்லை: புகைப்பட தொகுப்பு

நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காலை 7 மணி முதல் நாளை காலை 5 மணி வரை தொடரும் இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

தென் தமிழக பகுதியான திருநெல்வேலியில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மொத்த நகரமும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கினால் அமைதியாக கிடக்கும் முக்கிய பகுதிகளின் புகைப்படங்கள் சில….