புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (20:07 IST)

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

சட்டப்பேரவையில் இன்று துறை ரீதியான விவாதத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை 2 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புழல் மத்திய சிறை வளாகத்தில் 25 லட்சம் செலவில் புதிய வானொலி நிலையம் அமைப்பது, தற்போது சிறையில் உள்ளோருக்கு வழங்கப்படும் உணவை மாற்றியமைக்க குழு ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் அறிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.